Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!

Webdunia
பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பீர்க்கங்காயை துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு தேவைக்கு ஏற்ப உப்பிட்டு அன்றாடம் காலை மாலை என இரண்டு வேளை பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
 
பீர்க்கங்காய் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இரு வேளை குடித்து வருதலால் ஆஸ்துமா எனும் மூச்சு முட்டுதல் குணமாகும். 
 
பீர்க்கங்காயைச் சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, அதை சாதம் வடித்த கஞ்சியோடு கலந்து, குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வந்தால் இளநரை நீங்கும். தலைமுடியும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
 
பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். 
 
பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்து தொழு நோயின் மேலே பூசி வந்தால், தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments