Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறிகளும் தீர்வுகளும்...!

Advertiesment
நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறிகளும் தீர்வுகளும்...!
பெண்களுக்கு ஏற்படும் இந்த நீர்க்கட்டிகளை சில அறிகுறிகளை கொண்டு கண்டுபிடிக்க முடியும். இவை ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் உள்ள ஆண்களுக்கான ஹார்மோன்களை தூண்டி விட்டு தாடை, உதடு இவற்றின் மேல் முடி வளர்வதும், முகத்தில் சிறு பருக்கள், எரிச்சல் தன்மை உண்டாவதும்  நீர்கட்டிக்கான ஒரு அறிகுறியாகும்.
திடீரென்று மனசோர்வு அல்லது எதிலும் நாட்டமின்மை உண்டாகலாம். அதற்கும் நீர்கட்டி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நீண்ட இடைவெளிக்கு பின்  வரும் மாதவிடாயின் பொழுது அதிக வலி ஏற்பட்டால், அது கண்டிப்பாக நீர்க்கட்டியின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். 
 
குறைபாடுள்ள சினைப்பை, கனைய சுரப்பு நீரின் அதிகரிப்பு இவற்றால் ரத்தக்குழாய்களுக்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து உயர் இரத்த  அழுத்தம் ஏற்படலாம்.
 
ஒரு நாளில் 60-100 முடி இழைகள் கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதிகப்பட்சமான முடி உதிர்ந்தால் இது நீர்க்கட்டிக்கான மற்றொரு பொதுவான  அறிகுறியாகும்.
 
தீர்வுகள்:
 
காளானில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள் இதை கட்டாயாம்  சாப்பிடுவது அவசியம்.
 
சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இவை பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.
 
பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளதால் பெண்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.
 
நறுமணமிக்க உணவுப் பொருளான பட்டை இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.
 
ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது. கலோரி குறைவாக  உள்ள பசலைக் கீரையை யும் பெண்கள் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும் நீங்கிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் அகத்திக்கீரை...!