Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் தரும் சீந்தில் கொடி !!

பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் தரும் சீந்தில் கொடி !!
பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று  அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும்.

தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரியும். வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில்  கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும்.
 
நீரிழிவு நோயுக்கு தனிப்பட்ட மூலிகையாகவே இதனைக் கொள்ளலாம். இதன் முதிர்ந்த கொடியை சிறுக நறுக்கி நன்கு இடித்து நீரில் கரைத்து பாத்திரத்தை  அசையாமல் சில மணி நேரம் வைத்திருக்கவும்.
 
பின்னர் நீரை வடித்து, அடியில் பார்க்க வெண்மையான மாவு படிந்திருக்கும். மீண்டும் இதுபோல் கரைத்து வடிக்கட்டிட, சுத்தமான வெண்மை நிறத்தில் மாவு போல்  கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். சர்க்கரைக்கு பதிலாக இதைப் படுத்தலாம். நீரிழிவில் தோன்றும் கை, கால் அசதி உடல் மெலிவு அதிதாகம்,  பாதங்களில் எரிச்சல் மற்றும் குத்துவது போன்று வலி ஆகியன நீங்கும்.
 
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு  கொடுக்கப்படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். 
 
வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நுரையீரலில் ஏற்படும் சளி பிரச்சினைகளை போக்கும் எளிய மருத்துவ முறைகள் !!