Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா சாமந்திப்பூ !!

Webdunia
சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து கலந்து அருந்தினால் மலச்சிக்கல் உடனடியாக தீரும். உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நாம் நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு டக்கென்று நீங்கும்.

சிலருக்கு எவ்வளவுதான் உணவருந்தினாலும் உடல் எடை கூடாமல் என்றும் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தான் தோன்றுவார்கள். இவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை வெயிலை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது.
 
சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து தண்ணீரில் நன்றாக ஊறவையுங்கள். 5 முறை தண்ணீரை மாற்றிக் கொண்டே இருங்கள். பிறகு அதை வடித்து, பூக்களை  மட்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை, சீயக்காயுடன் கலந்து தலையில் தேய்த்துக் தினமும் குளியுங்கள். தலை அரிப்பு, பொடுகு, முடி  கொட்டுவது போன்ற எக்கச்சக்கமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர, மலச்சிக்கல் குணமாகும். முறையற்ற மாதவிடாய் கோளாறும் சரியாகும். வயிறு உப்புசம் நீங்கும்.
 
பூவை கடாயில் போட்டு சூடாக்கி, துணியில் கட்டி வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடியாக வீக்கம் குறையும். மூலிகைக் கடைகளில் சாமந்திப் பூவில் தயாரித்த 'மதர் டிஞ்சர்' விற்கப்படுகிறது. இதை, அடிபட்ட புண்ணில் தடவினால் சீக்கிரம் ஆறி விடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 2 துளி உள்ளுக்கு சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.
 
ஒரு சில வகை கேன்சர் நோய்க்கும் இது மருந்தாக பயன்படுகிறது. காதடைப்பு இருந்தால், காதில் ஒரு துளி விட்டுக்கொண்டால் போதும். உடனடியாக  சரியாகிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments