Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குங்குமப் பூவை சாப்பிடுவதால் நிறமாற்றம் ஏற்படுமா....?

குங்குமப் பூவை சாப்பிடுவதால் நிறமாற்றம் ஏற்படுமா....?
புற்று நோய்க்கான ஆராய்ச்சியில் குங்குமப் பூவில் பல வேதிமப் பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பாக உள்ளதால் பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. இலுப்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. 
 
குங்குமப் பூ வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன  உளைச்சல் நீங்குகின்றது. வயது முதிர்ச்சியால் வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட  திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது. 
 
ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன. 
 
மூட்டு வலி உடையோருக்கு குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்குகின்றது. குங்குமப் பூ  ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. ஆனால அதனை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், பசியின்மை போன்றவை  ஏற்படும். 
 
நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலியானது. 10 அல்லது 15 நிமிடங்களில் கழித்து நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ என்பதை கண்டறியலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ குணங்கள் நிறைந்த பீர்கங்காயின் பயன்கள்...!