Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக விளங்கும் பூனைகாலி விதை !!

சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக விளங்கும் பூனைகாலி விதை !!
பூனைகாலி விதையை பொடி செய்து, அரை கிராம் அளவு எடுத்து தினமும் பாலில் அருந்தி வர மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை சம்மந்தமான கோளாறும் நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.   

பூனைகாலி விதை, சுக்கு திப்பிலி, கிராம்பு கருவாப் பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவற்றை எடுத்து நீர் விட்டு அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும் .இந்த மாத்திரையில் 1 மாத்திரை வீதம் தினமும் காலை மாலை இருவேளை உண்டு வர வயிற்று புழு, குன்மம், வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
 
உடல் வன்மை குறைந்தவர்கள் பூனைகாலி விதை, சாதி பத்திரி, சமுத்திர பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து தினமும் காலை மாலை அரை கிராம் முதல் 1 கிராம் வரை பாலுடன் கலந்து அருந்த ஆண்மை பெருகும்.     
 
பூனைகாலி வேரை முறைபடி கஷாயமிட்டு 30 மி.லி முதல் 60 மி.லி வீதம் அருந்தி வர ஊழி நோய், சுரம்  முதலியவைகளில் தோன்றும் வாதம், பித்தம், கபம் நீங்கும்.
 
பூனைகாலி வேரை அரைத்து யானைகால் நோயால் ஏற்பட்ட வீக்கத்திற்கு பற்று போடலாம். நல்ல பலன் அளிக்கும். பூனைகாலி விதை தேள்கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
பூனைகாலி விதையை மேல் உள்ள தோலை நீக்கி ஆட்டுப் பாலில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . பின்பு அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர ஆண்மை கோளாறு, நரம்பு தளர்ச்சி, உடல் பலகீனம் சரியாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சளியால் ஏற்படும் தொண்டைகட்டை குணமாக்கும் சித்தரத்தை !!