Publish Date: Fri, 28 Jan 2022 (18:34 IST)
Updated Date: Fri, 28 Jan 2022 (18:42 IST)
சிவப்பு நிற உருண்டையான கனியுடையது விதை. கொடி மூலம் விருத்தி அடைகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இரு வகை உண்டு.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும்.
பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. ஏனேனில் பிரண்டையானது உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் தன்மை கொண்டது.
பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.
பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.
இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
Sasikala
Publish Date: Fri, 28 Jan 2022 (18:34 IST)
Updated Date: Fri, 28 Jan 2022 (18:42 IST)