Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளை பூசணி சாற்றில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

வெள்ளை பூசணி சாற்றில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!
வெள்ளை பூசணி சாறில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த மூலமாகும்.


இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
 
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
 
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக  இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
 
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு மிகவும் நல்லது.
 
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் முழுமையாக குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவிடும் சுரைக்காய்....!!