Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய்!!

Advertiesment
ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய்!!
நெல்லிக்காயில் கரு நெல்லி, அரு நெல்லி என இரு வகை உண்டு. நெல்லிக்காயை உலர்த்தி கொட்டை எடுத்தபின் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லி முள்ளி என்றும், நெல்லி வற்றல் என்றும் அழைக்கப்படுகிறது.
நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
 
நெல்லிக்காய் சாறுடன் தேன் எலுமிச்சம்பழச் சாறு சம அளவு கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும்  குணமாகும்.
 
நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் இளநரையை மாற்றும். முடி  நன்கு வளரும்.
 
சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும் அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.
 
நெல்லிக்காய் சாறுடன், பாகற்காயை சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரை நோயை குணமாக்குகிறது.
 
தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். இளமையாக இருக்கவும், தொற்று நோய் பரவாது. சிறுநீரகம் மற்றும் இதயம்  பலப்படும்.
 
கோடைக்காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக  இருக்கும். 
 
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தொற்று நோய், தோல் நோய் குணமாகும். உடலில் உள்ள கொழுப்பு பொருளை கரைத்து ரத்தம் சீரகப் பாய்ந்து இதயத்துக்கு பலத்தை கொடுத்து மாரடைப்பு நோயை குணமாக்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருமையான சுவையில் கேரளா ஸ்பெஷல் கடலை கறி!