Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுரையீரல் கோளாறுகள் மற்றும் சளியை போக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (14:11 IST)
எலுமிச்சை சாறை சுடுநீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சளையும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.


நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும். சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments