Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயிற்று கோளாறுகளை உடனே போக்கிடும் புதினா !!

வயிற்று கோளாறுகளை உடனே போக்கிடும் புதினா !!
ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் உண்டாகின்றன.
புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில்  அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில்  தெரியவந்திருக்கிறது.
 
புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். 
 
புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. 
 
புதினா தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து  வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.
 
புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தலைவலி குணமாக புதினா எண்ணெய் வலியுள்ள பகுதியில் மேல் பூச்சாக பூச வேண்டும். இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு உறங்க மிகுந்த பலன் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் வெற்றிலை !!