Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவும் வைத்திய குறிப்புகள்...!!

Advertiesment
இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவும் வைத்திய குறிப்புகள்...!!
நாவல் பழங்களின் கொட்டைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த கொட்டைகளை நன்கு காயவைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப்  பொடியைத் தினமும் அரை ஸ்பூன் என்ற அளவில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்துக்கொண்டு காயவைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் என்ற அளவில் தண்ணீரில்  சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்த நீரை வடிகட்டி அருந்த வேண்டும். தினமும் காலையில் இவ்வாறு செய்து வந்தால் நீரிழிவு நோய்  குறைந்துவிடும்.
 
இது ஒரு அற்புதமான மூலிகையாகும். மரணத்தைத் தவிர மற்ற அத்தனை விதமான நோய்களுக்கும் இந்த கருஞ்சீரகம் சிறந்த மருந்து என்று கூறப்பட்டுள்ளது.  அந்த வகையில் கருஞ்சீரகத்தை அப்படியே அல்லது பொடியாக அரைத்து தினமும் உட்கொள்வதன் மூலம் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம்.
 
இந்த இலவங்கப்பட்டையைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் அரை ஸ்பூன் என்ற அளவில் இதனை உட்கொள்ள வேண்டும். இதைத்  தொடர்ந்து செய்து வரும் பொழுது ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது மேலும் கெட்டக் கொழுப்பைக் கரைப்பதிலும் பெயர் பெற்றது.
 
கற்றாழையின் வெளிப்புறத் தோலை நீக்கி உள்ளிருக்கும் வழவழப்பான பகுதியை எடுத்துக் கொள்ளவேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, இந்த சாற்றைத் தினமும் அருந்தி வர, இரண்டாம் வகை சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
 
வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு ஸ்பூன் என்ற அளவில் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். வெந்தயக் கீரையை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். இரத்தத்தின் சர்க்கரை அளவு சீரான அளவில் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுக்குவை கஷாயம் செய்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள் !!