Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் கிடைக்கும் பிரண்டையில் உள்ள மருத்துவ பயன்கள் !!

Webdunia
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. 

சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. ஏனேனில் பிரண்டையானது உடைந்த எலும்புகளை ஓட்ட வைக்கும் தன்மை கொண்டது.
 
பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.
 
இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.
 
பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
 
உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். 
 
பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

மார்பக புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள்?

ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள்

நீங்கள் சாப்பிடும் உணவு மட்டுமல்ல, அதை சமைக்கும் முறைகூட 'சர்க்கரை அளவை உயர்த்தலாம்'

அடுத்த கட்டுரையில்
Show comments