Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமானத்தை அதிகரிக்க செய்யும் மாங்கொட்டை !!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (13:41 IST)
மாம்பழ கொட்டைகள் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. அவற்றுள் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருக்கின்றன.


மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. செரிமானக்கோளாறு, அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி, தூளாக்கி உட்கொள்ளலாம்.

மாங்கொட்டை தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு தூளை கலந்தும் பருகலாம். சுவைக்காக சிறிது தேனையும் சேர்த்துக்கொள்ளலாம். அதுபோல் எலுமிச்சை சாறுடனும் இந்த தூளை கலந்து பருகலாம்.

மாங்கொட்டை தூள் இதய நோய் அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது. மாங்கொட்டையில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக்கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

உலரவைக்கப்பட்ட மாங்கொட்டை பருப்புத் தூளை உட்கொண்டு வந்தால் உடலில் கொழுப்பின் அளவு சீராக இருக்கும்.

மாங்கொட்டை தூள் மோசமான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை தானாகவே அதிகரிக்கவும் வைத்துவிடும். இது தவிர ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குப்படுத்தவும் துணைபுரியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments