Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம் !!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (09:18 IST)
தயிரில் கால்சியம், வைட்டமின் பி 2, வைட்டமின் பி 12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தயிர் பாலை விட எளிதில் ஜீரணிக்க கூடியது.


லாக்டோபாசிலஸ் என்னும் பாக்டீரியா பாலை புளிக்கவைத்து தயிராக்குகிறது, இந்த பாக்டீரியா உடலின் செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் தொற்றுநோய்க்கு ஆளாகாமல் குடலை அவை பாதுகாக்கின்றன.

தயிரில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில சிறப்பு புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

தயிர் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும். வழக்கமாக தயிர் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

தயிரில் நல்ல பாக்டீரியா உள்ளது, இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிர் சாப்பிடுவது குடலுக்கு நன்மை உண்டாகும்.

தயிரை தினமும் உட்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த  தயிர் உங்கள் பற்களையும் எலும்புகளையும் வலுவாக்குகிறது. இது கீல்வாதத்தை  தடுக்க உதவுகிறது.

தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments