Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல் உப்பு எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?

Advertiesment
crystal Salt
, வியாழன், 5 மே 2022 (17:25 IST)
பெரியவர்கள் அல்லது சிறுவர்களின் காதில் சிறுபூச்சி அல்லது எறும்பு சிலசமயம் புகுந்து விடுவது உண்டு. இதனால் காதில் வலி ஏற்படும். குத்தல், குடைச்சல் உண்டாகும்.


இந்த அரை அவுன்ஸ் அளவு தண்ணீரில் அரை தேக்கரண்டியளவு உப்பைப் போட்டுக் கரைத்து அந்தத் தண்ணீரில் சிறிதளவு வலியுள்ள காதில் விடவேண்டும், காது நிறையும் வரை விடவேண்டும்.

ஒருநிமிஷம் கழித்து அந்த தண்ணீரைச் சாய்த்து வெளியேற்றிவிட்டு, மறுபடியும் புதிய தண்ணீர் விடவேண்டும். இந்த விதமாக மூன்றுமுறை விட்டு வந்தால் காதிலுள்ள பூச்சி வெளியேறிவிடும், அல்லது இறந்துவிடும், வேதனை நின்றுவிடும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் கொஞ்சம் உப்பு, அதே அளவு வெங்காயம் அதே அளவு சுடுசோறு இவைகளை அம்மியில் வைத்து, அரைத்து நகச்சுற்றுள்ள விரலில் வைத்துக்கட்டி விடவேண்டும். இந்தவிதமாகக் கட்டினால் வேதனை குறையும், எப்படியிருந்தாலும், நகத்தின் உள்ளே இருந்துவரும் சிறு கொப்புளம், மறுபடி உள்ளே செல்லும்வரைச் செய்ய வேண்டும். இதனால் வலி ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.

குளவி மற்ற சிறிய பூச்சி எதுவும் கடித்து அல்லது கொட்டிவிட்டால் உப்பைத் தூளாக்கிக் கொஞ்சம் தண்ணீரில் கெட்டியாக அரைத்து அந்த உப்பை கடுப்புள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டால் கடுப்பு நிற்கும். காயக் காயப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருமையான சுவையில் ரசமலாய் செய்ய !!