Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் கோவைக்காய்....!!

Webdunia
சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது. இதை சரிசெய்ய தினமும் இந்த கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும்.

சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் நோய்களுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும் இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.
 
தலையில் பொடுகு, முடி உதிர்வு, இவைகளுக்கு இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலும்பிச்சை பழத்துடன் சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.
 
பல் வலி, ஈறுகளில் வலி மற்றும் வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவக்காய் ஜூஸ் குறைக்கிறது. சிறுநீரகத்தில் கல் இருந்தால் இதற்கு கோவைக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும். 
 
உடலுள் சேரும் கெட்ட கழிவுகளை கோவைக்காய் நீக்குகிறது. மசாலா அதிகம்  சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடை சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும். கோவைக்காய் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கிறது. 
 
கோவைக்காய் நன்மைகள்: சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால்  சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments