பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும். இதே போல், பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் வைத்தால், காயம் சீக்கிரம் ஆறும். பீர்க்கை நார் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்க கூடியது.
பீர்க்கங்காயை துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு தேவைக்கு ஏற்ப உப்பிட்டு அன்றாடம் காலை மாலை என இரண்டு வேளை பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல் வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால் கிரகித்துக் கொள்ளக்கூடியது. பீர்க்கங்காயை அளவோடு எடுத்து கொண்டால் நல்லது.
பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து சேர்த்து தொழு நோயின் மேலே பூசி வந்தால், தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.