Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படும் கோரைக்கிழங்கு !!

பல்வேறு வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படும் கோரைக்கிழங்கு !!
கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து. 

இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.
 
பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது.
 
பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை தருகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது.
 
வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது. 
 
குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ் சியை எடுத்துத் தோலை நீக்கிக்  கொள்ள வேண்டும்.  இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். 
 
காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவி டும். இந்த மருந்தை  எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண் டும். இதே முறையில் சாப்பிட சாப்பிட்டு வந்தால்  சீதபேதி குணமாகும். 
 
தாய்பால் குறைந்து விட்ட தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால் நன்றாக சுரக்கும்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரைமுடி ஏற்படுவதை தடுப்பதோடு கருமையாக்கும் குறிப்புகள் !!