Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க முடியுமா...?

Webdunia
தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது.  உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடிக்கவேண்டும்.

தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடல் எடையை குறைக்கும்.
 
இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரைய செய்யும்.
 
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது  வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.
 
கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
 
பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.
 
சக்கரவள்ளிக்கிழங்கு இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும்.
 
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments