Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க உதவும் வெந்தய டீ....!

Webdunia
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த பானத்தை தினமும் அருந்திவர பெண்களுக்கு வயிற்று பகுதியில் மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் தேவையற்ற சதைகளை குறைக்க இந்த வெந்தய டீ பயன்படுகிறது.
பெண்கள் பொதுவா குழந்தையை பெற்றெடுத்த பிறகு, அவர்களுக்கு அதிகமாக சதை சேரும். அந்த சதையை குறைப்பதற்கு இந்த வெந்தய டீ  பெரிதும் உதவுகிறது.
 
வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும். அதுவும் தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் ஒரே வாரத்தில் 3 கிலோ  வரை தொப்பை குறைய உதவுகிறது.
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.
 
வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது. எனவே உடல் சூடு குறைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த வெந்தய  டீ குடித்து வர உடனே உடல் சூடு குறைந்து விடும்.
 
வெந்தயத்தில் அதிகளவு அமினோ ஆசிட் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
 
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவரால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த வெந்தய டீ அருந்திவர மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும்.
 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
 
அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.
 
வெந்தய டீ செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
 
இந்த நீரை தினமும் ஒரு டம்ளர் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் சேரும் தேவையற்ற தொப்பை குறைய  வழிவகுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments