Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூண்டை எவ்வாறு பயன்படுத்துவதால் அதன் நன்மைகளை பெறமுடியும்..?

பூண்டை எவ்வாறு பயன்படுத்துவதால் அதன் நன்மைகளை பெறமுடியும்..?
பூண்டு அல்லில்சிஸ்டின் என்படும் வேதிப்பொருளை தன்னகத்தே அதிகம் கொண்டது. இது ரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் சிறிதளவு பூண்டு சேர்த்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது. 

பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும்  உதவுகிறது.
 
நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு  பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன்  இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும்.
 
பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
 
பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும்.
 
தினமும் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு வாய் துர்நாற்றம், பற்களில் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. ஒவ்வொருநாளும் பூண்டை நன்கு மென்று சாப்பிட பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்றவை நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூலிகைகளை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ் !!