கசகசாவை எந்த முறையில் சாப்பிடுவதால் நோய்கள் தீரும்....?

Webdunia
இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை எடுத்து, கால் டம்ளர் பாலில் ஊறவைத்து உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படும்.

கசகசா மற்றும் பூனைகாலி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 5 கிராம் அளவு எடுத்து, பாலிம் கலந்து இரவு  நேரங்களில் உண்டுவர நரம்புதளர்ச்சி நீங்கும். உடல் வலிமை பெறும்.
 
வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.
 
கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  உண்டுவர உடல் வலிமை பெறும்.
 
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.
 
கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து  கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments