Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் நிவாரணம் தரும் கோபுரந்தாங்கி மூலிகை !!

Advertiesment
சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் நிவாரணம் தரும் கோபுரந்தாங்கி மூலிகை !!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (15:52 IST)
கோபுரந்தாங்கி மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி, சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.


நன்மை தரக்கூடிய கோபுரம் தாங்கி செடிகள் நீர்பாங்கான இடங்களில் புதர்போல் வளர்ந்து இருக்கும். இதன் இலையை அரைத்து நெற்றியில் போடும்போது தலைவலி சரியாகும்.

முடி வளரக்கூடிய தைலமாகவும் பயன்படுகிறது. மருத்துவ குணத்தை கொண்ட வேர் பகுதியை காயவைத்து பொடித்து வைத்து, காலை மற்றும் மாலையில் சிறிதளவு சாப்பிடும்போது எலும்புகள், தசைகள் பலப்படும். உடல் தேற்றியாக பயன்படுகிறது.

கோபுரந்தாங்கியின் இலையும் கொட்டைகரந்தையின் இலையும் சம எடை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு 100மி லிட்டராக காய்ச்சி தினமும் காலை குடித்துவந்தால் உடல் காய கற்பமாகி விடும்.

கோபுரம் தாங்கி செடி பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. வயிற்றை சுத்தப்படுத்துகிறது. காய்ச்சலை தணிப்பதுடன் சிறுநீர் பெருக்கியாக பயன்படுகிறது.

இலையை பயன்படுத்தி முடிகொட்டுதல், முடி உதிர்தலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு இலை பசையுடன், இரண்டு பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தய்த்தால் முடி உதிர்வது கட்டுப்படும். புழுவெட்டு சரியாகும். முடி வளரும்.

சரும அரிப்பு, சருமத்தில் ஏற்படும் வெள்ளை நிற புழு வெட்டுக்கள், வெ்ணதிட்டுக்கள் ஆகியவற்றுக்கு வாரம் இரண்டு முறையாவது இந்த கோபுரந்தாங்கி இலைகளை மை போல அரைத்துத் தடவி வந்தால் நிச்சயம் சருமப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்...?