உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் பழச்சாறுகள் !!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (11:44 IST)
உடல் எடையை விரைவாக குறைக்க பழச்சாறு தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவிற்கு பதிலாக ஜூஸ் பருகவேண்டும்.  பழச்சாறு குடிக்கும்போது வயிறு நிறைத்து நீண்ட நேரம் பசிக்காமல் ஆரோகியமாக இருக்கவைக்கும்.


அன்னாசி பழத்தை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அறைத்து ஜூஸ் செய்து பருகினால் உடல் கொழுப்பை கரைத்து ஒரு மாதத்திற்குள் எடை குறைக்க உதவும்.

தக்காளியை 3 அல்லது 4 எடுத்து நன்கு வேகவைத்து சிறிதளவு வெல்லம் சேர்த்து அறைத்து ஜூஸ் போன்று குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நன்கு அறியலாம்.

ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதை பிழிந்து சாறெடுத்துக்கொண்டு சிறிதளவு உப்பு சிறிதளவு தேன் சேர்த்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்தால் உடல் எடை குவைவதற்கு உதவும்.

ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ்யை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை திராட்சை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வந்தால் நமது உடல் எடை குறையும். ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் சரியாகும். மேலும் அஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments