Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் கிடைக்கும் வாழைத்தண்டில் உள்ள மருத்துவ குணங்கள்

Webdunia
அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியும். அதே சமயம் வாழைத்தண்டின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ்  குடிக்க வேண்டும்.
 
வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர்  குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
 
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க  வேண்டும்
 
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும்  வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.
 
வாழைத்தண்டு ஜூஸ் செய்ய:
 
மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு  நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments