Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவித நோய்களுக்கு மருந்தாகும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்

Webdunia
கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள்  தேய்த்து குளித்து வரலாம்.

 
 
புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து,  பயன்படுத்துவது நல்லது.
 
ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி  மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.
 
கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக  வெளியேற்றும் தன்மை கொண்டது. 
 
இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.
 
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக  கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.
 
தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிடவேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

 

நெல்லிக்காய் இஞ்சு ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

அடிக்கடி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments