எள்ளுப்பொடி எப்படி செய்வது தெரியுமா...?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
எள் - 1/2 கப் 
உளுந்து - 1/2 கப் 
மிளகாய் வத்தல் - 15
பூண்டு பற்கள் - 10
புளி - சிறிய கோலி அளவு 
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

 
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை  போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
 
எள், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும். இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.
  
நன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு  வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி தயார். இவை இட்லி தோசையுடனும், சுட சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

காலிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் எவை எவை?

ஓவர் மேக்கப்பால் சருமத்திற்கு பிரச்சனையா? இதை செய்தால் போதும்..!

பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நெற்றியில் சுருக்கங்கள் இருக்கிறதா? எப்படி மறைய வைப்பது?

அடுத்த கட்டுரையில்
Show comments