Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்யவேண்டுமா...?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்யவேண்டுமா...?
தேவையான பொருள்கள்:
 
கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா (மல்லி) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 
பெரிய வெங்காயம் - 2 
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கொத்தமல்லி - 
 தேவையான அளவு

செய்முறை:
 
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை கொள்ளுவை வேகவைத்து எடுக்கவும் வேகவைத்த கொள்ளு, வரமிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேகவைத்த தண்ணீர் சேர்க்கலாம். 
 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து வதக்கி புளி  தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும். மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயன்தரும் மூலிகைகளும் அதன் அற்புத பயன்களும் !!