Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகள் எவை தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (17:45 IST)
ஆரோக்கியமான உடலுக்கு கால்சியம் சத்து மிக அவசியம். நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும்.


பெரும்பாலான கீரை வகைகளில் கால்சியம் உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும்.

பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமானக்கோளாறுகள் நீங்கும்.

உணவில் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் வெங்காயத்தாளில் கால்சியம், பொட்டாசியம் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனை காய்கறி சூப் முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

எள் சாப்பிடும் பழக்கம் வழக்கொழிந்து வருகிறது என்றே சொல்லலாம். எள் உருண்டை செய்து சாப்பிடலாம். எள்ளைப் பொடி செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். எள்ளில் நிறைய கால்சியம் சத்து இருக்கிறது. எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணெய்தான் நல்லெண்ணெய்.

உலர் அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தினமும் இரண்டு வில்லைகள் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராது. மேலும் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments