Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடர்த்தியாக முடி வளர என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

அடர்த்தியாக முடி வளர என்ன செய்யவேண்டும் தெரியுமா...?
முடி கொட்டுவதற்கு என்ன காரணங்கள் உள்ளன என்று முதலில் பார்க்கலாம். அவற்றைத் தெரிந்து கொண்டால் மட்டுமே வேண்டியவற்றைத் தவிர்க்க இயலும்.

முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.
 
முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை ஏற்படுதல் போன்ற தொல்லைகளுக்கு மற்றொரு முக்கியமான காரணம் பரம்பரை பிரச்சினையாகும். தந்தை வழியில் அல்லது தாய் வழியில் இந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ஜீன் மூலம் பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.
 
முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும். உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.
 
சராசரியாக ஒரு நாளுக்கு 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் முடி நிச்சயமாகக் கொட்டத் தொடங்கும்.
 
சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை அடுப்பிலேற்றி மிதமான அளவு சூடுபடுத்திக் கொள்ளவும். இதனை மிருதுவாக ஸ்கால்ப்பில்  விரல்களைக் கொண்டு சுழற்சி முறையில் தேய்க்கவும். இதனை சில நிமிடங்கள் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில்  தலைக்குக் குளிக்க வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். 
 
தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல  பலனைத் தரும். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க  துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். 
 
கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி  அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும்,  பளபளப்பாக மாறி, அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளை அள்ளி தரும் அதிமதுரம்...!!