பீட்ரூட் கீரையில் என்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (13:13 IST)
கிழங்கு வகைகளிலிருந்து கிடைக்கின்ற கீரைகளில் பீட்ரூட் கீரையும் ஒன்று. பொதுவாக பீட்ரூட் கிழங்கை நாம் உணவில் சேர்த்துக் கொள்கின்ற அளவு பீட்ரூட் கீரையைச் சேர்த்துக் கொள்வதில்லை. 

பீட்ரூட் கீரையை வீணடிக்காமல் உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. பீட்ரூட் கீரையில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் என்னும் உயிர்ச்சத்து மிகுதியாய் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன.
 
உடல்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாறை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும்.
 
இக்கீரையைத் தனியாக பொறியல் செய்யலாம். மேலும் துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டுத் தயாரிக்கலாம். பாசிப் பயறு, தட்டைப் பயறு முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இவ்வாறு செய்யப் படும் கூட்டு சுவையானதாக இருக்கும்.
 
பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்த ஒரு கீரையாகும்.
 
பீட்ருட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிமை கொடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments