Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சள் பூசணி விதைகளில் நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும் !!

மஞ்சள் பூசணி விதைகளில் நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும் !!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (17:10 IST)
பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காய் குளிர் காலங்களில் கிடைக்கக்கூடிய காயாகும்.


மஞ்சள் பூசணியில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது , இது குடல் இயக்கத்தினை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது.
 
கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும்  ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. 
 
100 கிராம் பூசணி விதையில் இருந்து 500 கலோரிகள் வரை பெற முடியும் இதில் நார்ச்சத்து புரதம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் மாங்கனீசு பாஸ்பரஸ் மெக்னீஷியம் தாமிரம் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. 
 
மஞ்சள் பூசணியில் வைட்டமின் இ உள்ளதால் சரும ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு அளிக்கிறது. பூசணிக்காய் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல  பயனை அளிக்கிறது.
 
உடல் சூடு தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. பூசணியின் விதைகளை எடுத்து அதனை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றும் ஆரஞ்சு பழம் !!