Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் வயிற்றில் எந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்பது தெரியுமா...?

Webdunia
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள அமிலம்தான் முக்கிய காரணம்.


இந்த அமிலமானது இரைப்பையில் சுரக்கும்  அமிலத்துடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.
 
சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால்  குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
 
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில்  கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.
 
தயிரில் என்ன தான் நல்ல பக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கல்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.
 
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச்செய்து, நெஞ்செரிச்சலை  ஏற்படுத்திவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments