Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைக்காயில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா....?

Webdunia
வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது.

வாழைக்காய் ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக்  கட்டுபடுத்துகிறது.
 
வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும் மாவுச்சத்தும் உள்ளது.
 
பசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு. மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.
 
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து  சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. 
 
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடலில் ஏற்படும்  புற்று நோய் வராமல் தடுக்கிறது.
 
வழைக்காயில் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ்  ஆகிய நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments