Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் பார்லி எடுத்துக்கொள்வதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா....?

Webdunia
பார்லியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, புரோட்டீன், கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்து போன்றவை  அடங்கியுள்ளது.

உடலில் உள்ள பித்த நீருடன் சேர்ந்து, தேவையற்ற கொழுப்பை மலம் மூலமாக வெளியேற்றும். எடைக் குறைக்க வேண்டும் என்று நினைபவர்களுக்கு பார்லி சிறந்த உணவாகப் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
 
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவாகும். இது உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதால், இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
 
உடலில் உள்ள தேவையற்ற தண்ணீர் வெளியேற வழியின்றி உடலில் அப்படியே தேங்கிவிடும். இதனால் காய்ச்சல் உண்டாகும். இவ்வாறு தேங்கிய நீரை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.
 
பார்லியை தானியத்தை சாறு போன்று செய்து தினமும் குடித்து வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடையும். மேலும் வயதானவர்களுக்கு  வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் குறைகின்றன.
 
பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரியான அளவில் உள்ளது. இதனால்  பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments