Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!

குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!
முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.

சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம்.  மூக்கடைப்பு நீங்கும்.
 
குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே  வந்துவிடும்.
 
சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.
 
எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். மிளகுத் தூளையும், மஞ்சஐயும் பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
 
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
 
ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.
 
பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்
 
2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி!