Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் குளியல் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...?

Webdunia
எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணெய்யை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. எண்ணெய்யை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்துவதால், சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று  ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. தலைக்கு சீயக்காய், அரப்பு, சாதம் கஞ்சி போன்றவைகளை பயன்படுத்தலாம்.
 
தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி, பிறந்த நாள், விரத நாட்கள் போன்ற நாட்களாக  இருக்கக் கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. ஏனென்றால் இந்த  நாட்கள் குளிர்ச்சியான நாட்கள் ஆகும்
 
குளிர்ச்சியான நாட்களில் பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பது விதி. நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்  குளிக்கலாம். பெண்களுக்கு வெள்ளி, செவ்வாய் நாட்களும், ஆண்களுக்கு சனியும், புதனும் ஆகும்.
 
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது, பழைய சாதம், கற்றாழை, மோர், இளநீர், தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments