Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொட்டாற்சுருங்கி இலையை எந்த முறையில் பயன்படுத்தவேண்டும் தெரியுமா...?

தொட்டாற்சுருங்கி இலையை எந்த முறையில் பயன்படுத்தவேண்டும் தெரியுமா...?
தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய்  குறையும். 


‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில்  வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும்.
 
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர்  எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல்  குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
 
தொட்டாற் சுருங்கி இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம்,  பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். 
 
தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர  குழிப்புண் போன்ற புண்கள் குறையும்.
 
ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால்  நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இன்றைய நிலவரம்!