Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடல் புற்று நோயை எதிர்த்திடும் முட்டைகோஸ்!

Advertiesment
குடல் புற்று நோயை எதிர்த்திடும் முட்டைகோஸ்!
முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால்,  புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது.
 
விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள், உடம்பின் உணர்வுகளுக்கும் இதர உடற்செயல்பாட்டிற்கும்  உறுதுணை புரிகின்றது. மேலும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள துணை செய்கிறது.
 
பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற தாது உப்புகள் முட்டைகோஸில் இருப்பதால், இவை இதய துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த  அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
 
விட்டமின்-K நிறைய அளவில் இருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை  குணமாக்கும்.
 
முட்டைகோஸில் தயோசயனேட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருப்பதால், இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.
 
முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ’பிரீ-ரேடிக்களை’ சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா..? கெடுதலா..?