Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டுக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
தண்டுக் கீரை குளிர்ச்சியைத் தரவல்லது. இதில் இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளன. பச்சை நிறத்தண்டை உஷ்ண தணிவுக்குச் சாப்பிடலாம்.


நீர்த்தாரையில் எரிச்சல், எரிச்சலுடன் நீர் பிரிதல் இருந்தால், இக்கீரையைச் சாப்பிட குணமாகும். மூலச் சூடு உள்ளவர்கள், மூல நோயால் அவதியுறுபவர்கள் இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நல்லது. இதனால் உடலிலுள்ள உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியடையும்.
 
தண்டுக் கீரையுடன், சீரகம், மஞ்சள் மற்றும் பார்லியைச் சேர்த்து சுஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நேபேதி குணமாகும். நீர் எரிச்சல், நீர்க் கடுப்பும் மறையும். சிறுநீர் தராளமாகப் பிரியும்.
 
தண்டுக் கீரையுடன் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து, சாற்றுக்கு சமமாகத் தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
 
தண்டுக் கீரையுடன் உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நரம்புக் கோளாறுகள் சரியாகும். வயிறு அளவுக்கு அதிகமாக பெரிதாகிறதே என்று கவலைப்படுபவர்கள், பச்சை நிறத் தண்டுக்கீரையை சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.
 
சில பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் வலியும் எரிச்சலுடன் கூடிய அதிக இரத்தப்போக்கும் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் சிவப்பு நிறத் தண்டுக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லைகள் நீங்கும்.
 
கருப்பையில் ஏற்படும் பல கோளாறுகளைக் குணமாக்கவல்லது. குளிர்ச்சியான உடல் வாகுள்ளவர்கள் கீரையுடன் பூண்டையும் சேர்த்துச் சப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
 
தண்டுக் கீரையில் அதிக அளவு கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இவற்றில் உடல், தசை, எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தருகிறது.
 
தண்டுக் கீரை, மிளகு, மஞ்சள், தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட் டால் ரத்தம் சுத்தமாகும். உடலில் புது ரத்தம் உற்பத்தி ஆகும். உடல் வலுப்பெறும். படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments