Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்டைக்காய் வற்றல் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும். 
 
கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது. அத்துடன் அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும். 
 
சளித்தொல்லை சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.
 
சுண்டைக்காய் வற்றலுடன் மாதுளை ஒடு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 
சுண்டைக்காய் வற்றல் மற்றும் ஒமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
 
சுண்டை வற்றல் உடன் கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியன சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசியின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியன குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments