Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!

வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!
சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக்குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.
அஜீரணரக் கோளாறால் வயிற்றில் வாய்வு அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குவதால் வயிற்றிலும், வாயிலும் புண்கள்  உருவாகின்றன. இதற்கு தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
 
3 அல்லது 4 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
 
செம்பருத்திப் பூக்களைப் பறித்து இரவில் தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விடவேண்டும். இதேபோல் தொடர்ந்து  செய்து வந்தால் பேன்கள் ஒழிவதோடு பொடுகுத் தொல்லையும் நீங்கிவிடும்.
 
சிலர் காயவைத்த செம்பருத்திப் பூக்களுடன் ஆவாரம் பூ, பாசிப் பயறு, கறிவேப்பிலை சேர்த்துப் பொடியாக்கி சோப்புக்கு பதிலாக தலை முதல்  கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக் கொள்ளலாம்.
 
மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு கர்ப்பப்பை  குறைபாடுகளும் சரியாகும்.
 
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக்  கட்டி பத்து  நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய்  எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.  இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.
 
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூக்களின் இதழ்களை மென்று தின்று வந்தால் காலப்போக்கில் இதயநோய் குணமாகும். செம்பருத்திப் பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை  பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.
 
செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை  அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம் செய்ய...!