Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண கிடைக்கும் பயன்கள்...!!

Webdunia
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும்  இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம்  குணமாகும்.
 
அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
 
அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.
 
இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
 
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேகவைத்து உண்ணவேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம்  மலச்சிக்கல் நீங்கும். 
 
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

தொடர்புடைய செய்திகள்

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments