Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பீட்ரூட் !!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (09:06 IST)
பீட்ரூட் என்பது வேர்களில் வளரக்கூடிய ஒரு காயாகும். இந்த பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகள்உண்டு. பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதன் சிவப்பு வண்ணத்தில் புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது.


பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது.

பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது, உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது, இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. டிமென்ஷியா எனும் மூளை சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது, மேலும் உடல் எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு உடல் எடையை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது.

பொட்டாசியம் நிறைந்துள்ள இந்த பீட்ரூட் நரம்பு மற்றும் தசைகளின் செயலாக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. பொதுவாக பொட்டாஷியம் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறைவான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக அமையும். இந்த பீட்ரூட்டில் பொட்டாசியம் என்பது அதிக அளவு உள்ளது. அதனால் இதனை வாரம் இரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments