Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவகுணம் கொண்ட சிறந்த மூலிகைகளில் ஒன்று சீந்தில் கொடி !!

seenthil kodi
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (18:03 IST)
சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம்  கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஜலதோஷத்திற்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பார்கள். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர்.


சீந்தில் தண்டை பொடி செய்து, பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் மூட்டு வலி பறந்தோடும். சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களின் மேல் தடவி வந்தால், கண் பார்வை தெளிவடையும். சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காய்ச்சலின் அறிகுறிகளை முறியடிக்கிறது.

நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை, ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு சீந்திலை கஷாயம் போல செய்து சாப்பிட்டால் பூரண குணம் பெறலாம்.

சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

சீந்தில் கொடியிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகிய பிரச்சனைகளை சீர் செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீர்க்கங்காயில் உள்ள மருத்துவ பயன்கள் !!