Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது ஏன் தெரியுமா...!

குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது ஏன் தெரியுமா...!
குளியல் = குளிர்வித்தல், குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில்  இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.


வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரை அப்படியே  மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
 
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. எதற்கு இப்படி. காலில் இருந்து  ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ்  நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். 
 
முன்பெல்லால் நமது முன்னோர்கள், குளிப்பதற்கு குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும்போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
 
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா? உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள். இது எதற்கு..? உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். எனவே உச்சியில் சிறிது நினைத்து  விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
 
இதிலிருந்து நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்துவிட்டு ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும். பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால்  அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளைப் போக்கும் வல்லாரை...!