Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்து காணப்படும் பெருங்காயம் !!

Advertiesment
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்து காணப்படும் பெருங்காயம் !!
, திங்கள், 31 ஜனவரி 2022 (16:48 IST)
காரமும், கசப்பு சுவையும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் ஜீராணிக்க வைக்கும்.


பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பெருங்காயம் செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறது.

தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம். பல் வலி அதிகம் உள்ளவர்கள், பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுபவர்கள், பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை தீரும்.

வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் இருமல் ஆகியவற்றை போக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேங்காய் எண்ணெய் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!