Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகத்தின் நன்மைகள்...!

Advertiesment
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகத்தின் நன்மைகள்...!
சீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை சரியாக நடைமுறைப்படுத்தி எடுத்து செல்லும். கருஞ்சீரக எண்ணெய் முடக்குவாதத்திற்கு நல்ல மருந்து.
உள் உறுப்புகளை சீர் செய்வதாலேயே இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. குறிப்பாக செரிமாணத்தை தூண்டக் கூடியது. கல்லீரலை பலப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்தக் கூடியது. புற்றுநோயை கட்டுப்படுத்தும்.
 
மலச்சிக்கலை போக்கக் கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்கக் கூடியது. சீரகம் உடலுக்கு உஷ்ணத்தை தந்து வியர்வையை வெளியேற்றக்   கூடியது.
 
சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்(குருதிச் சிவப்புநிறமி) அளவை அதிகரிக்கும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
 
பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து காக்கும். சீரகம் ஒரு செரிமான ஊக்கமருந்து என்பதால் வயிற்றிலும் குடலிலும் உள்ள   வாயுவை வெளியேற்றும்.
 
சீரகத்தில் தைமோக்யூநோன் இருப்பதால் ஆஸ்துமா (ஈளை நோயை) கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். மாதவிடாய்  சுழற்சியை சீராக்கும்.
 
சுவாச கோளாறுகளுக்கு நல்ல தீர்வை தரும். எடை குறைப்பதில் உதவும். எதிர் ஆக்சிகரணிகள் மற்றும் எதிர்ப்பு அழற்சி குணங்கள் சீரகத்தில் இருப்பதனால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
 
குறிப்பு: சீரகத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் அவற்றுள் சில சீரக எண்ணெயில் எளிதில் ஆவியாக கூடிய பொருட்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும். ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்த கூடிய வாய்ப்புள்ளது.
 
மாதவிடாய் சுழற்சியின் பொது அதிகமான உதிரபோக்கை ஏற்படுத்திவிடும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மிதமான அளவே பயன்படுத்த வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய சில அற்புத மருத்துவக் குறிப்புகள்...!