Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடி உதிர்தலை தடுத்து ஆரோக்கியத்தை அளிக்கும் கற்றாழை !!

Advertiesment
Aloe vera
, வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (13:42 IST)
கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக இருப்பதால், இயற்கையான சீரம் போல் செயல்படுவதோடு முடிக்கு ஊட்டமளிக்கிறது. குறிப்பாக உலர்ந்த மற்றும்  உதிர்ந்த முடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.


முடி உதிர்தல் மட்டுமல்ல கற்றாழையில் முடி வளர்ச்சியை தூண்டும் என்சைம்கள் உள்ளன. அவை தலையில் உள்ள இறந்த செல்களை அளித்து புது செல்களை வளர செய்கின்றன. எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கின்றன.

கற்றாழை முடிக்கு சிறந்த வகையில் பயன்படுகிறது. முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. முடியை பிரகாசமாக வைத்துக்கொள்ள கற்றாழை மிகவும் பயன்படுகிறது. முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும். எனவே உங்கள் கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும்.

தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதிக விலை கொடுத்து தேவையற்ற பயன்தராத சிகிச்சைகளை செய்வதை விட்டுவிட்டு நாம் எளிதில் கிடைக்கும் இந்த மாமருந்தை பயன்படுத்தினால் அதிக நன்மைகளை பெறலாம்.

கற்றாழை முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் தந்து முடியை பாதுகாக்கிறது. கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏராளமான கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!